தந்தானத்தன தந்தானே | தான தந்தனத் தந்தானே
தன்னானே தானானனே தன்னானே.......

தையும் பிறந்தது மங்களமாய் - எம்
தமிழ் வளர்ந்தும் இங்கிதமாய்
பொங்கலோ பொங்கல் //
போற்றிக் கும்மி அடியுங்கடி

முற்றத்தை கூட்டி நீர் தெளித்து
சுற்றி வரக் கட்டு தோணைங்கள்
அற்புதமாய் நல்ல கோலமிட்டு
அதன் நடுவில் அடுப்பும் வைத்து

பசுவின் பாலை முழுதும் இட்டு
பக்தி பொங்க பானை ஏற்றி
பொங்கலோ பொங்கல் போற்றுங்கடி
பொங்கிடும் பொங்கலை வாழ்த்துங்கடி

புரண கும்பம் முற்றதிலே பால்
பொங்கி வழியுது பானையிலே
ஆதவன் பகலவன் இரவி சூரியன்
அருளை இரஞ்சி கும்மியடி

பாடியவர்-
திருமதி.சிவை குகணேசன் (விரிவுரையாளர் யா.தே.க.க)
சதுஸ்ரஜாதி ஏகதாளம் (திஸ்ர நடை)
Last modified: Thursday, 5 December 2024, 12:22 PM