தந்தானே தந்தானே தந்தானே தங்கம்
தந்தானே தந்தானே தந்தானே தங்கம்

தையும் பிறந்ததம்மா தங்கம் பொலிந்ததம்மா
செய்நெல் விளைந்ததம்மா தேசம் மகிழ்ந்ததம்மா

மாம்பு மணந்ததம்மா வாழைத்தார் போட்டதம்மா
தேம் பால் சொரிந்ததம்மா தேசம் மகிழ்ந்ததம்மா

குயிலோ கொஞ்சுதம்மா குழலோசை கேட்குதம்மா
மயில் போல் நடம் புரிவோம் மங்களப் பொங்கல் உண்போம்


பாடியவர்-
திருமதி.சிவை குகணேசன் (விரிவுரையாளர் யா.தே.க.க)
சதுஸ்ரஜாதி ஏகதாளம் (திஸ்ர நடை)
Last modified: Thursday, 5 December 2024, 12:22 PM