ஆறுமுக நாவலர்
Completion requirements
ஆறுமுக நாவலர் அருந்தமிழின் காவலர் வீறுகொண்டு சைவத்தின் மேன்மைதந்த கோனவர் நல்லூரிலே பிறந்தவர் நல்லறிவு நிறைந்தவர் எல்லோருக்கும் இனியவர் ஈசனையே பணிபவர் திருக்குறளை மிகமிகத் திருத்தமாகப் பதித்தவர் இருக்குமுதல் வேதங்கள் இயம்பும் நெறியை மதித்தவர் கந்தபுராணங் கற்றவர் கருணையுள்ளம் பெற்றவர் சிந்தைசெயலில் தூயவர் சித்தாந்தமே ஆய்பவர் பேச்சில்மிகவும் வல்லவர் பிறர்மதத்தை வெல்பவர் மூச்சும்தமிழ்க்காய் விட்டவர் மும்மலத்தைச் சுட்டவர் தென்னாட்டிலும் ஈழத்தின் சிறப்பைநாட்டி வைத்தவர் பொன்னாட்டினும் புரவலன் போற்றுமெங்கள் நாவலன் |
Last modified: Thursday, 5 December 2024, 11:58 AM