நல்லூர்
Completion requirements
நல்லூர்க் கந்த சாமி கோயில் நாங்கள் வணங்கும் கோயில் கல்லுக் கனியக் கசிந்து கதறிக் கருணை வேண்டுங் கோயில் அல்லும் பகலும் அடியார் கூட்டம் அழுதும் தொழுதும் பரவி நல்லூர்க் கந்தா கந்தா என்று நயந்து வணங்கும் கோயில் அழகும் அன்பும் அருளும் தெளிவும் அமைந்து நிறைந்த கோயில் முழுவும் குழலும் யாழும் பாட்டும் முழங்கும் நல்லூர்க் கோயில் ஞான வளமும் நலமும் தவமும் நண்ணும் நல்லூர்க் கோயில் வான உலகாய் யாழ்ப்பாணத்தை மலர்த்தும் நல்லூர்க் கோயில் எல்லை இல்லா அன்பர் கூடி இனிய விழாவைக் காணும் நல்லூர்க் கந்த சாமி கோயில் ஞாலம் போற்றும் கோயில். |
இறுதியாக மாற்றியது: வியாழன், 5 டிசம்பர் 2024, 12:15 PM