வெண்ணிலா
Completion requirements
பாலைப் போல வெண்ணிலா பார்க்க நல்ல வெண்ணிலா கோல வானில் நின்றொளியைக் கொட்டு கின்ற வெண்ணிலா வெள்ளிக் கூட்டம் சுற்றி நிற்க விளங்கு கின்ற வெண்ணிலா அள்ளி அள்ளிச் சோற்றையுட்டி அம்மா காட்டும் வெண்ணிலா கரிய முகிலுள் ஒளித்துக் கள்ளம் பழகும் வெண்ணிலா தெரியவில்லை என்று தம்பி தேடிச் சிணுங்கும் வெண்ணிலா கலா தம்பி காந்தியோடு கையைக் கோர்த்துக் கொண்டு நிலா நிலா என்று கூவி நின்று துள்ளும் வெண்ணிலா. |
இறுதியாக மாற்றியது: வியாழன், 5 டிசம்பர் 2024, 12:19 PM