இளமைப்பருவம்
Completion requirements
இளமைப்பருவம் இனிய பருவம் எழுச்சி நல்கும் பருவம் விளையும் அன்பும் தொண்டும் வாழ்வில் விருந்து செய்யும் பருவம் மலையைத் தூக்கி தலையில் வைக்க மார்பு தட்டும் பருவம் கலைகள் கற்று புலமையாலே கருத்து மலரும் பருவம் நாட்டை மொழியை அடிமை ஆக்க நாங்கள் இங்கு வாழ்வோம் ஈட்டி முனையில் உயிரைக் கொடுப்போம் என்றெழும்பும் பருவம் இன்னல் கோடி வாழ்வில் வந்து எதிர்த்து நின்ற போதும் தன்னை லத்தைப் பேணி டாத சால்பு கொண்ட பருவம் சென்ற கால நிகழுங் காலச் செயல்கள் யாவும் தேர்ந்தே என்று வாழும் எதிர்காலத்தை இயற்றும் இளமைப் பருவம் |
இறுதியாக மாற்றியது: வியாழன், 5 டிசம்பர் 2024, 12:00 PM