74. நாடு
Completion requirements
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரணியல். அதிகாரம்: நாடு
| 731. | தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. |
| 732. | பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. |
| 733. | பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. |
| 734. | உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. |
| 735. | பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லத நாடு. |
| 736. | கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. |
| 737. | இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. |
| 738. | பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. |
| 739. | நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. |
| 740. | ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. |
Last modified: Friday, 6 December 2024, 12:32 PM