குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:கற்பியல். அதிகாரம்: படர்மெலிந்திரங்கல் .

   
1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை
இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.
1162. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய்
செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.
1163. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
1164. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
1165. துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
1166. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
1167. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
1168. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
1169. கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.
1170. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின்
வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.
 
Last modified: Thursday, 5 December 2024, 1:19 PM